என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநாடு கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநாடு](https://media.maalaimalar.com/h-upload/2022/08/02/1739994-8.jpg)
மாநாட்டில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாநாடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
- கொடியேற்றும் நிகழ்ச்சியும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம், கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 8-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக, கபிஸ்தலம் கடைவீதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர். தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சியும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது. முன்னதாக கொடியினை அர்ஜூனன் ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு கலியமூர்த்தி அஞ்சலி செய்தார். அனைவரையும் மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் தில்லைவனம் வேலை அறிக்கை வாசித்தார். வரவு செலவு அறிக்கைகளை மாவட்ட பொருளாளர் சௌந்தரராஜன் வாசித்தார். பின்பு, ஏ.ஐ.டி.யு.சி யின் மாநில செயலாளர் சந்திரகுமார் தொடக்க உரை நிகழ்த்தினார்.
இதில் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தையும், மதசார்பின்மையும் பாதுகாக்க போராடுவோம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சட்ட ஆலோசகர் பாரதி, மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட துணை செயலாளர் மணி மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு சாமு. தர்மராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைப்பின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.