என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்வித்துறை அலுவலக பணியாளர்களுக்கு கலந்தாய்வு
- முன்னுரிமை அடிப்படையில் விருப்பத்திற்கு ஏற்ற இடம் வழங்க வலியுறுத்தினர்.
- அலுவலகங்களில் அலுவலக பணியாளர்களுக்கு பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் , வட்டார வளர்ச்சி கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கல்வித் துறை அலுவலகங்களில் அலுவலக பணியாளர்களுக்கு பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு இந்த கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணிபுரிந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த பொது கலந்தாய்வில் முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ள இடங்களில் பணியிட மாறுதல் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் கேட்ட இடம் வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சிலருக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இடம் வழங்கப்பட்டது.
எனவே சரியான முறையில் முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பாராபட்சமின்றி அவர்கள் கேட்கும் இடத்திற்கே பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது