search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் பேசிய காட்சி.

    விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட உள்ளது.
    • 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைத்துள்ள சிலைகளை ஆங்காங்கே உள்ள காவிரி ஆற்றில் கரைக்கின்றனர்.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் உள்ள பரமத்தி, ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர், நல்லூர், வேலகவுண்டன்பட்டி ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட உள்ளது.

    அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைத்துள்ள சிலைகளை ஆங்காங்கே உள்ள காவிரி ஆற்றில் கரைக்கின்றனர். இந்து முன்னணி சார்பில் வைக்கப்படும் சிலைகள் வரும் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வந்து பரமத்தி வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும். பின்னர் விநாயகர் சிலையை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள காவிரி ஆற்றில் இரவு சுமார் 7 மணி அளவில் கரைக்க உள்ளனர்.இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் நடைபெற்றது. பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நாளை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் செப்டம்பர் 4-ந் தேதி நடைபெற உள்ள ஊர்வலம் ஆகியவற்றின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி காவல்துறையினர் தெரிவித்தனர் .

    மேலும் சிலை வைக்கும் போதும், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் போதும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடாது. தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்க வேண்டும் .மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது காவல்துறை வழங்கி உள்ள அறிவுறுத்தல் படி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மேற்படி வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு செயல்படு வதாக கூறினார்கள்.

    Next Story
    ×