search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல்துறை சார்பில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
    X

    சீர்காழியில் பட்டாசு கடை உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    காவல்துறை சார்பில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

    • பழைய பட்டா சுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது
    • உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் காவல்துறை சார்பில் ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு லாமெக் தலைமை வகித்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டி.எஸ்.பி லாமெக் பேசுகையில், கடையின் உரிமம், வெடி இருப்பு பதிவேடு ஆகியவற்றை கடை உரிமையாளர்கள் சரியாக பராமரிக்க வேண்டும்.

    உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும். எளிதில் தீ பற்றக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்ககூடாது.

    பட்டாசு கடை களில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும்.

    பழைய பட்டா சுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது என்று கூறினார்.

    இதில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×