என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பூதலூர் பகுதியில் தொடரும் மழை: காலம் தப்பிய மழையால் குறுவை அறுவடை பணிகள் முற்றிலும் பாதிப்பு
- சாலைகளில் குவித்து வைத்திருந்த குறுவை நெல்மணிகளை விவசாயிகள் பரப்பி காய வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
- திருக்காட்டுப்பள்ளி நகர சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி பூதலூர் பகுதிளில்நேற்றுபகல் நேரத்தில் வெயில் அடித்தது.
இதனால் சாலைகளில் குவித்து வைத்திருந்த குறுவை நெல்மணிகளை விவசாயிகள் ஆட்களை கொண்டு பரப்பி காய வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளும் தீவிரம் அடைந்தன.
இதே நிலை நீடித்தால் விவசாயிகளுக்கும் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு ஒரு சுமை இல்லாமல் போகும் என்ற நிலை நேற்று பகலில் உருவானது.
மாறாக நேற்று இரவு திருக்காட்டுப்பள்ளியில் பலத்த மழை பெய்தது. இதனால் திருக்காட்டுப்பள்ளி நகர சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்துஓடியதால் துர்நாற்றம் வீசியது.
இதைப் போன்றே பூதலூர்ல் இரவு சுமாரான மழை பெய்தது.
இன்று அதிகாலையில் இருந்து பூதலூரில் லேசாக தொடங்கிய மழை 7 மணி வரை பெய்தது.
இதனால் காலை நேர பணிகளை செய்வதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
காலையில் மழை பெய்ததால் நேற்று காய வைத்திருந்து மூடி வைத்திருந்த நெல்மணிகள் மீண்டும் காய வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு விவசாயிகள் உள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து விவசாயிகள் தரப்பிலும் மற்ற பல விவசாயிகள் அமைப்புகளின் சார்பிலும் ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக மாறி வருகிறது.
இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காலம் தப்பிய மழையால் குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளதோடு அறுவடை செய்யப்பட்டு உள்ள நெல்மணிகளும் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை உருவாகியுள்ளது.
விவசாயிகளின் நிலையை உணர்ந்து தமிழக அரசு குறுவை நெல் கொள்முதல் பணிகளை தீவிரப்படுத்தி முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.