என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் குழந்தை திருமணங்களைத் தடுக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது- அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
- குழந்தைகள் உரிமை காக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் தொடங்கியது.
- விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி:
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் உரிமை காக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் தொடங்கியது.
அமைச்சர் கீதாஜீவன்
பேரணியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி மாநகாட்சி வளாகத்தில் நிறைவடைந்தது.பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆண்டுதேறும் நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்புத்துறை மூலம் குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளின் உரிமைகளை காத்திடும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவும், குழந்தைகளின் உரிமையை காக்கவும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
குழந்தை திருமணம்
மேலும், சமூக பாதுகாப்பு துறை, காவல் துறை ஆகியவை இணைந்து போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்கவும், இழப்பீடு தொகை விரைந்து வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை திருமணம் செய்வோர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவர். மேலும், குழந்தை திருமணத்தை தடுக்க தொடர் நடவடிக்கைமே ற்கொள்ளப்பட்டு வருகிறது. அது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு சத்துணவில் தரமான முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமிபதி, தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், குழந்தை நலக்குழு தலைவர் ரூபன் கிஷோர், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் உமா, சிறப்பு சிறார் காவல் அலகு உறுப்பினர் வக்கீல் சொர்ணலதா, தி.மு.க. பொறியாளர் அணி தலைவர் பழனி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், கல்லூரி மாணவ, மாணவிகள், சைல்டு லைன் பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்