என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில் தொடர் கைவரிசை -  ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டில் திருட்டு
    X

    உடைக்கப்பட்ட ஜன்னலையும், பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் படத்தில் காணலாம்.

    பேட்டையில் தொடர் கைவரிசை - ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டில் திருட்டு

    • பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன..அதில் இருந்த 2 கிராம் தங்க காசு உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
    • சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், அன்னலெட்சுமி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை கோடீஸ்வரன்நகரை சேர்ந்தவர் சிவன்(வயது 68). பேட்டை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சிவன், கடந்த 2010-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.

    திருட்டு

    இவர் தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமீபத்தில் வெளியூருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இன்று காலை வீடு திரும்பிய அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.அதில் இருந்த பித்தளை குத்து விளக்குகள், 2 கிராம் தங்க காசு உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. அதிர்ச்சி அடைந்த சிவன் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது பின்புறத்தில் இருந்த ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு இருந்தது.

    கண்காணிப்பு

    இதனால் அந்த வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்திருப்பதை அவர் அறிந்தார். உடனே பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், அன்னலெட்சுமி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, பீரோவில் பதிந்திருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடீஸ்வரன்நகர் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவதாகவும், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×