search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில்  ஆண்களுக்கான கருத்தடை விழிப்புணர்வு ரதம்
    X

    விழிப்புணர்வு ரத தொடக்கவிழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    தென்காசியில் ஆண்களுக்கான கருத்தடை விழிப்புணர்வு ரதம்

    • குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா 21-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனர் பிரேமலதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா கடந்த 21-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவுரையின்படி ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் டாக்டருமான பிரேமலதா, குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரதம் மூலம் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சையின் சிறப்பம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் ராஜேஷ், மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வெள்ளைச்சாமி, மகப்பேறு பிரிவு முதன்மை குடிமை மருத்துவர் புனிதவதி, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் ஸ்வர்ணலதா, கார்த்திக், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர், புள்ளி விபர உதவியாளர் வேலு, வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர்கள் , செயின்ட் மேரி செவிலியர் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் மாணவிகள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×