search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தை முன்னிட்டு அனல்மின் நிலையத்தின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

    • தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன.
    • ஒப்பந்த ஊழியர்கள் இன்று திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

    அனல்மின்நிலைய தமிழ்நாடு மின்ஊழியா மத்திய அமைப்பு சார்பில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்கள் இன்று திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை போன்று ஊழியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குடிநீர், கேண்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு கழிப்பிடம், மருத்துவசதி என்பன உள்ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதில் 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×