search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
    X

    பட்டமளிப்பு விழா நடந்த போது எடுத்த படம்.


    தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    • தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 35-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • பட்டமளிப்பு விழா வழிமுறைகள் குறித்து கல்லூரியின் நிர்வாக அதிகாரி மணிகண்டன் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 35-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் தென் மண்டல இயக்குனர் அரவிந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற 665 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் சாதி, மத பேதமின்றி ஒழுக்கத்துடன் கூடிய தகுதியை வளர்த்துக் கொண்டு கல்லூரியில் சிறந்து விளங்கியது போலவே சமுதாயத்திலும் சிறந்து விளங்க வேண்டும். சமுதாயத்திற்கு பயன்பெறும் வகையில் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

    விழாவிற்கு கல்லூரி தலைவர் டாக்டர் புதிய பாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், மாணவர்கள் எப்பொழுதும் பல சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்றார். தாளாளர் கல்யாணி வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் வரவேற்றார். பட்டமளிப்பு விழா வழிமுறைகள் குறித்து கல்லூரியின் நிர்வாக அதிகாரி மணிகண்டன் கூறினார் . ஏற்பாடுகளை அனைத்து துறைத் தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×