search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில்  தேயிலை கண்காட்சி-வாரிய செயல் இயக்குனர் தகவல்
    X

    குன்னூரில் தேயிலை கண்காட்சி-வாரிய செயல் இயக்குனர் தகவல்

    • இந்திய தேயிலை வாரியத்தின் 70-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    • தேயிலை கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    ஊட்டி,

    குன்னூர் இந்திய தேயிலை வாரியத்தின் 70-வது ஆண்டு விழா குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது. . விழாவில் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேயிலை வாரியத்தின் முன்னாள் துணைச் செயலாளர் ரங்கையா கலந்து கொண்டார்.

    முன்னதாக குத்து விளக்கு ஏற்றி தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார் பேசும்போது கூறியதாவது:-

    அனைத்து சிறு, குறு விவசாயிகளும். தோட்ட அதிபர்களும். தேயிலை தொழிற்சாலை உரிமையா ளர்களும்.

    வியாபாரிகளும். ஏலம் எடுப்பவர்களும் அனைவரும் ஒன்றிணைந்து தேயிலை வாரியத்துடன் இணைந்து செயல்பட்டால் தேயிலையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல முடியும். நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒரு மாதங்களில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களில் மலர் கண்காட்சி. காய்கறி கண்காட்சி. பழக்கண்காட்சி போன்றவை நடக்கிறது.

    அது போல தேயிலை கண்காட்சியும் நடத்த முடிவு செய்துள்ளோம். அதைப்பற்றி மாவட்ட கலெக்டரிடம் பேசி நல்ல முடிவு எடுத்து குன்னூரில் உள்ள காட்டேரி பூங்கா கோத்தகிரி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் எங்கு வைப்பது என்று முடிவு செய்து விரைவில் தேயிலை கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தேயிலை வாரிய உறுப்பினர்கள் தனஜெயம். ராஜேஷ் மற்றும் ஏராளமான சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் தேயிலை தயாரிப்பவ ர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×