search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடவாசல் பகுதியில் கோடை மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு
    X

    மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களை திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் பார்வையிட்டார்.

    குடவாசல் பகுதியில் கோடை மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு

    • வயல்களில் நீர் தேங்காமல் வடிய வைத்திட விவசாயி களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
    • கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மற்றும் எள் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் மற்றும் வலங்கை மான் வட்டாரங்களில் எதிர்பாராமல் பெய்த கோடை மழையினால் பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மற்றும் எள் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது.

    இந்த வயல்களை திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி பார்வையிட்டு பயிர் நிலவரங்களை ஆய்வு செய்தார்.

    வயல்களில் நீர் தேங்காமல் வடிய வைத்திடவும், வாடல் நோய் தாக்கத்தினை குறைத்திடவும், விவசாயி களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன், வேளாண்மை அலுவலர்கள் வெங்கடேஸ்வரன், சூரியமூர்த்தி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரவி மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியைச் சார்ந்த உதவி வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×