search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மன்ற தலைவர் பதவியேற்பு விழா
    X

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மன்ற தலைவர் பதவியேற்பு விழா

    • ஒவ்வொரு மன்றத்திற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
    • மன்றத்தின் நோக்கம் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்களை வகுப்பு வாரியாக 6 குழுக்களாக பிரித்து இலக்கிய மன்றம், இயற்கை மன்றம், சேவை மன்றம், கணித மன்றம், கலை மற்றும் கைவினை மன்றம், நுண்கலைகள் மன்றம் என பிரித்தனர். ஒவ்வொரு மன்றத்திற்கும் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்க ப்பட்டனர். ஒவ்வொரு மன்றத்திலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவ்வுறுப்பினர்களுக்கு ஒரு தலைவர் மற்றும் துணைத்தலைவர் என தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுக விழா நடைபெற்றது.

    விழாவில் ஒவ்வொரு மன்ற உறுப்பினர்களும் தலைவர்- துணைத் தலைவர் எனத் தங்களை அறிமுகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மன்ற உறுப்பினர்களும் தங்கள் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்திறன் குறித்து ஆடல் -பாடல் நாடகத்துடன் கூடிய செய்முறை விளக்கம் அளித்தனர். முடிவில் பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவர்களுக்கு இம்மன்றங்களின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்து மாதந்தோறும் இம்மன்றத்தின் மூலம் மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாகப் போட்டிகள் பல நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×