என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை கேட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதம்- நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
- கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ள மாதாந்திர ஊதியத்திற்கு நன்றி தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தங்கள் வார்டு பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைநது வருகின்றனர் என்று கவுன்சிலர்கள் கூறினர்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை சேர்மன் சங்கரா தேவி முருகேசன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுகந்தி தீர்மானம் குறித்து விளக்கி கூறி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நகராட்சி சேர்மன், துணைச் சேர்மன், கவுன்சிலர்களுக்கு, முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ள மாதாந்திர ஊதியத்திற்கு நன்றி தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கவுன்சிலருமான ஜெயபாலன் தீர்மானம் முன்மொழிந்தார் அதனை தொடர்ந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தங்கள் வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படவில்லை எனவும், சரிவர தண்ணீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைவதாகவும், சாலை வசதி மற்றும் கட்டிட அனுமதி வழங்கப்படாதது குறித்தும், புதிய நகராட்சியான சுரண்டை வளர்ச்சி பெற தடையாக நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர், நகராட்சி பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் நியமிக்கப்படாமல் பொறுப்பு அதிகாரிகள் செயல்படுவதால் பணிகள் சரிவர நடக்கவில்லை எனக் கூறியும் கவுன்சிலர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான சக்திவேல், வசந்தன், மாரியப்பன், ராஜேஷ், ராஜ்குமார், பால சுப்பிரமணியன், மாரியப்பன், வெயிலு முத்து, ரமேஷ், வினோத் குமார், பரமசிவன், ஜெயராணி வள்ளிமுருகன், பொன்ராணி ஜெபராஜா, கல்பனா அண்ண பிரகாசம், அம்சா பேகம், அந்தோணி சுதா, செல்வி, பூபதி, முருகேஸ்வரி உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்