என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குற்றாலத்தில் சாரல் திருவிழாவின் நிறைவு விழா இன்று மாலை நடைபெறுகிறது
- தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- நிறைவு விழாவாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ரவிமரியா, திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட காவடியாட்டம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் பொதுமக்க ளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
டி.வி புகழ் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, அன்னபாரதி கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி, திரைப்பட பாடகர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி கலந்துகொண்ட இன்னிசை நிகழ்ச்சியையும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
நிறைவு நாள்
விமர்சையாக நடை பெற்ற சாரல் திருவிழாவின் நிறைவு நாளான இன்று காலையில் சுற்றுலாத்துறை சார்பில் பழைய கார்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் மாலையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ-மாணவிகளின் மங்கள இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியும், சுற்றுலா துறை சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது.
நிறைவு விழாவாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ரவிமரியா, திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வரவேற்று பேசுகிறார். சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, முதன்மை செயலாளர் சந்திரமோகன் தலைமை ஏற்பு உரையும், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பரிசுகள் வழங்கி விழா பேருரையும் ஆற்றுகிறார்.
சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி சிறப்புரையாற்றுகிறார். மேலும் தென்காசி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றுகின்றனர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் நன்றி கூறுகிறார்.