search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை
    X

    புதன்சந்தை மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை

    • நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய மாட்டு சந்தை மாலை 3 மணி வரை நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.2 கோடிக்கு நேற்று ஒரே நாளில் வர்த்தகம் நடந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய மாட்டு சந்தை மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதில் இறைச்சி மாடுகள், வளர்ப்பு மாடுகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை கொண்டு வந்தனர்.

    கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் மாடுகளை வாங்க வந்திருந்தனர். இவர்கள் மாடுகளை வாங்கி கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றனர். மேலும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகளை வாங்க, விற்க வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர்.

    இறைச்சி மாடுகள் ரூ.19 ஆயிரம், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம், கன்று குட்டிகள் ரூ.10 ஆயிரம் என விலை போனது. கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்று குட்டிகள் ரூ.11 ஆயிரம் முதல் விற்பனையானது. மொத்தம் ரூ.2 கோடிக்கு நேற்று ஒரே நாளில் வர்த்தகம் நடந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×