என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு- இறந்தவர் உடலை ஓடை வழியாக சுமந்து செல்லும் கிராம மக்கள்
- வேப்பங்குளம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.
- ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டுக்கு பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது வேப்பங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதால் இறந்தவர்களின் உடலை அதன் அருகே உள்ள ஓடை வழியாக கொண்டு செல்ல வேண்டி இருப்பதாகவும், மழை காலங்களில் ஓடை களில் தண்ணீர் செல்லும் போது மிகுந்த சிரமப்படுவதாகவும் அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
எனவே ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ஆனாலும் இதுவரை சுடுகாட்டு பாதை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த விஜய குமார் என்பவர் இறந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டு ஓடையில் இறங்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்கு அவரது உறவி னர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
தொடர்ந்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இன்று காலை நெல்லை டவுன் தாசில்தார் வைகுண்டம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று அவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஆக்கிரமிப்பை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து ஓடை வழியாக விஜயக்குமார் உடலை சுமந்து சென்று அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.