search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
    X

    மருதமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

    • கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
    • போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கியது.

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

    தைப்பூசத்தையொட்டி நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்து.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதுதவிர காவடி ஆட்டம், பால்குட ஊர்வலமும் நடந்தது.

    நேற்றே மருதலையில் தைப்பூச தேரோட்ட திருவிழா முடிந்தாலும், இன்று தைப்பூச தினம் என்பதால், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக மருதமலை முருகன் கோவிலுக்கு வந்தனர்.

    மருதமலை செல்லும் சாலையில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்றனர்.

    அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பாத யாத்தி ரையாக வந்த முருக பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் மலைப்படிக்கட்டுகள் வழியாக, மலைகோவிலுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதுதவிர பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குட ஊர்வலமாகவும் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணதிரச் செய்தது.

    நேற்றை விட இன்று அதிகமான கூட்டம் காணப்பட்டது. மலைப்ப டிக்கட்டுகளிலும், மலைப்பா தையிலும் பக்தர்களாகவே காணப்பட்டனர். மலையடி வாரப்பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இதன்காரணமாக அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டி உள்ளது.

    அன்னூர் குமரன்குன்று சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் அழைத்தலும், கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு ஆடை மற்றும் மாலை வழங்குதல், அபிஷேக பூஜையும் நடந்தது.

    இன்று காலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை 7.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் மடாதிபதிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி

    யேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை வள்ளியம்மை திருக்கல்யாணமும், இரவில் யானை வாகன காட்சி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.

    இன்று காலை சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பரி வேட்டை நிகழ்ச்சியும், நாளை மறுநாள் ஒயிலாட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    Next Story
    ×