என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதுமண தம்பதி தஞ்சம்
- கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர்.
- சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்தவர் சுவேதா (வயது 23). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் சுவேதாவுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் ெவவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் விவகாரம் சுவேதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு தடை விதித்ததோடு வேறுஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதிர்ச்சியடைந்த சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர். அப்போது சுவேதா கொடுத்துள்ள புகார் மனுவில், எனது பெற்றோரால் ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.