search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் மெயின் அருவிக்கு மேலே அணை கட்ட வேண்டும் -  அமைச்சரிடம், சிவபத்மநாபன் மனு
    X

    வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் மனு அளித்த போது எடுத்த படம்.


    குற்றாலம் மெயின் அருவிக்கு மேலே அணை கட்ட வேண்டும் - அமைச்சரிடம், சிவபத்மநாபன் மனு

    • செண்பகாதேவி அருவியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருபுறமும் மலை முகட்டுக்கிடையில் இடமானது பறந்து விரிந்து காணப்படுகிறது.
    • அருவியில் தண்ணீர் விழுகிற வகையிலும், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கால் உயிர் சேதம் ஏற்படாத வண்ணமும் ஏற்பாடு செய்யலாம்.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவிக்கு மேலே செண்பகாதேவி அருவியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருபுறமும் மலை முகட்டுக்கிடையில் இடமானது பறந்து விரிந்து காணப்படுகிறது.

    அந்த பகுதியில் புதிதாக அணை கட்டி ஆண்டு முழுவதும் குற்றால அருவியில் தண்ணீர் விழுகிற வகையிலும், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கால் உயிர் சேதம் ஏற்படாத வண்ணமும் ஏற்பாடு செய்யலாம். இதற்கு பொதுப்பணித்துறை மூலம் அணை கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் கோரிக்கை மனு வழங்கி உள்ளார்.

    அணை கட்ட திட்டம் நிறைவேறுகிற போது வனத்துறை அனுமதி அவசியம் என்பதனால் அணை கட்டும் பட்சத்தில் அனுமதி வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் அவர் தனது கோரிக்கை மனுவினை வழங்கினார்.




    Next Story
    ×