search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேமராக்கள் பழுதாகி உள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு
    X

    கேமராக்கள் பழுதாகி உள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு

    • போலீஸ் துறை அதிகாரி களின் அலட்சியத்தால் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட கேமராக்கள் வீணாக கிடைக்கின்றது.
    • விபத்து, மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார் திணறி வருகி ன்றனர்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில், ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில், 63 சி.சி.டி.வி., கேமராக்கள், ஊத்தங்கரை நகர் பகுதியில் உள்ள முக்கிய, சாலை, கோவில், மற்றும் பாம்பாறு அணை, காரப்பட்டு, வீரியம்பட்டி, மேலும் எல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டது.

    இதனால் ஊத்தங்கரை பகுதியில் நடைபெறும், பல்வேறு திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து உடனடியாக அறிந்துகொண்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக, ஊத்தங்கரை நகர் பகுதியில் உள்ள 63 கேமராக்களில், தற்பொழுது 6 கேமராக்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

    மற்ற கேமராக்கள் பராமரிப்பின்றி பழுதாகி கிடக்கின்றது. இதனால், பல்வேறு திருட்டு, கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் நட மாட்டம் அதிகரித்துள்ளது.

    பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தனியார் பள்ளி, வணிகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து 27 லட்சம் ரூபாய் மதிப்பில், அமைத்துக் கொடுத்த சி.சி.டி.வி., கேமராக்களை, போலீஸ்துறையினர் பராமரிப்பின்றி விட்டுள்ள சம்பவம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

    விபத்து, மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.

    போலீஸ் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட கேமராக்கள் வீணாக கிடைக்கின்றது.

    பயனற்று கிடக்கும் கேமராக்களை சரி செய்து, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    இது குறித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×