search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு  பகல் நேர விரைவு ரெயில் இயக்க வேண்டும்- வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
    X

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரெயில் இயக்க வேண்டும்- வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

    • உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • 16106 ,16105 ஆகிய ரெயில்கள் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது.

    நாசரேத்:

    நாசரேத் நகர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அசுபதி சந்திரன் தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் ஒரு முக்கியமான கோவில் நகரம். இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    மேலும் அதன் அருகில் உள்ள ஊர்களான உடன்குடியில் அனல் மின் நிலையம் திறப்பதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    மேலும் குலசேகரன்பட்டி னமும் ஒரு புண்ணிய நகரமாகும். அவ்வூரிலும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்குரிய வேலைகளும் இந்திய அரசாங்கத்தால் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்த வேலைகளுக்காக பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரை வந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கின்றனர்.

    மேலும் நெல்லை- திருச்செந்தூருக்கு இடைப்பட்ட நாசரேத் ஊர் ஒரு கல்வி நகரமாகும். இவ்வூரில் பல பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி கல்லுாரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.

    பலதரப்பட்ட மக்களும் வந்து செல்வதற்கு வசதியாக வண்டி எண் 16106 ,16105 ஆகிய ரெயில்கள் திருச்செந்தூர்-சென்னை, சென்னை-திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் எப்பொழுதும் அதிக பயணிகளுடன் ஒடிக்கொண்டி ருக்கிறது. இதில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதால் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கிட வேண்டும்.

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும் கார்டு லைன் வழியாக பகல் நேர விரைவு ரெயில் இயக்கி தந்தால் இந்த பகுதி மக்கள் மிகவும் பயன் அடைவார்கள்.

    மேலும் இந்த பகுதிக்கு தொழில் வளர்ச்சியும் கிடைக்கும். மேலும் இங்குள்ள மக்கள் நலன் கருதி வண்டி எண் 16845 ஈரோட்டில் இருந்து நெல்லை, வண்டிஎண் 16846 நெல்லையில் இருந்து ஈரோடு வரை ரெயில் களை மேற்சொன்ன காரணங்களுக்காக திருச்செந்தூர் வரை நீட்டித்து தருமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×