search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
    X

    குளத்தில் செத்து மிதந்த மீன்களை எடுத்து தரையில் போட்டிருந்த போது எடுத்த படம். 

    ஜேடர்பாளையம் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

    • பள்ளபாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பள வுள்ள குளம் உள்ளது.
    • நேற்று இந்த குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பள்ளபாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பள வுள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் மீன்கள் வளர்த்து பிடித்து விற்பனை செய்து கொள்வதற்காக, ஒவ்வொரு வருடமும் கபிலர்மலை யூனியன் அலுவலகம் மூலம் டெண்டர் விடப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு குளத்தில் மீன்கள் வளர்ந்து பிடிக்க ரூ. 60 ஆயிரத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரை எடுத்தவர், சிறுநல்லிக் கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவருக்கு அதை கொடுத்துள்ளார். இதையடுத்து ராஜூ சுமார் 3 லட்சம் மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டு வளர்த்து மீன்பிடித்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று இந்த குளத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்த மீன்பிடி குத்த கைதாரர், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு கலை யரசன், ஜேடர்பாளையம் மீன்வளத்துறை ஆய்வாளர் கோகிலவாணி மற்றும் மாவட்ட தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் வடிவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    மர்மநபர்கள் யாராவது குளத்தில் விஷம் கலந்தனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஜேடர்பா ளையம் அருகே கரப்பாளை யத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா, கடந்த மார்ச் 11-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்குமாறு அப்ப குதி விவசாய சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், நித்யாவின் உறவினர்கள் மற்றும் அவ ரது சமூகத்தை சேர்ந்த வர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது குளத்தில் மீன்கள் திடீரென செத்து மிதக்கும் சம்பவம், இப்பகுதியினரி டையே மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பதட்டமான சூழ்நிலையில் உள்ள இந்த பகுதியை அமைதியான சூழ்நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×