என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழியில், சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • பொங்கல் போனஸ் ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும்.
    • தகுதி உள்ள சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு அரசு ஊழியர் விழிப்புணர்வு பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வட்டத்தலைவர் கலைவாணன் தலைமை வகித்தார்.

    வட்டசெயலாளர் பாலு வரவேற்றார்.

    இணை செயலாளர் முருகவேல், முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கே.மாரிமுத்து கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

    தொடர்ந்து 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தவேண்டும், பொங்கல் போனசை ௧௦ ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும், தகுதியுள்ள சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

    முடிவில் வட்டபொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.

    Next Story
    ×