search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் கொள்முதல் விலையை அறிவிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்-கூட்டத்தில் தீர்மானம்
    X

    விவசாயிகள் சங்க தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி பேசினார்.

    பால் கொள்முதல் விலையை அறிவிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்-கூட்டத்தில் தீர்மானம்

    • ஆவின் சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்ய வேண்டும்.
    • கலப்பு தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டும்.

    தருமபுரி,

    தமிழக விவசாயி சங்க தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட துணைத்தலைவர் அண்ணாமலை, மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கால்நடை தீவனங்களின் விலை 50 சதவீதம் உயர்வு மற்றும் உற்பத்தி செலவு உயர்வு ஆகிய காரணங்களால் பசும் பால் லிட்டருக்கு ரூ. 42-ம், எருமைப்பால் லிட்டருக்கு 52-ம் கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆவின் நிர்வாகத்தை காப்பாற்றவும், தனியாரிடம் பால் ஊற்றுவதை தடுக்கவும் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். தமிழக பட்ஜெட் நாளை (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படும் நிலையில் பால் கொள்முதல் விலையை உடனே அறிவிக்காவிட்டால் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

    தருமபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக திப்பம்பட்டி கூட்டுரோட்டில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் அனைவரும் கறவை மாடுகளுடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    கூட்டுறவு சங்கத்தின் மார்ஜின் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். லிட்டருக்கு ரூ. 7 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆணிவேராய் செயல்படும் கிராம சங்க பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்தி ஆவின் பணியாளராக நியமிக்க வேண்டும்.

    ஆவின் சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்ய வேண்டும். கலப்பு தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டும்.

    ஆரம்ப சங்க பணியாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இணையத்திலிருந்து கிராம சங்கங்களுக்கு நேரடியாக பால்பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சின்னசாமி, கந்தசாமி, முருகேசன், ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×