என் மலர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
- நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.
- போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூா்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஊக்க ஓய்வூதியம் ரூ.4000 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தஞ்சை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட ஓய்வூதி யர்கள் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச் செயலாளர் தில்லைவனம் முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
இதில் நுகர்பொருள் சங்க சி.ஐ.டி.யூ மண்டல செயலாளர் பாண்டித்துரை, அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன், மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி, நுகர் பொருள் வாணிப கழக போராட்ட குழுவை சார்ந்த வேணுகோபாலன், முருகேசப்பிள்ளை, மாரியப்பன், தியாகராஜன், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.