என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
- அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
கோவில்பட்டி:
தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. மேலும், மின் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தி மக்கள் மீது சுமையை திணித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது.
திறமையான காவல்துறை இருந்தாலும், அந்த துறையை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் கண்டு காணாததும் போல் இருப்பதால் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.
கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகமாக மக்கள் நடமாடும் இடங் ளில் தாராளமாக கிடைக்கின்றன. மாணவர்களை குறி வைத்தே பொருட்கள் விற்பனை நடக்கின்றன. இதனை தடுக்க இந்த அரசு திராணியற்று இருக்கிறது.
கோடை காலமான தற்போது அறிவிக்கப்படாத கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வருமான வரித்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னிச்சையான அமைப்பு. வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு யாரை வேண்டுமென்றாலும் சோதனையிட உரிமை உள்ளது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதுதான் மரபு.
இதையெல்லாம் பின்பற்றும் வழக்கம் தி.மு.க.வு.க்கு கிடையாது. அதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்