search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரும்பூர் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்த நகை, பணத்தை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    குரும்பூர் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்த நகை, பணத்தை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    • பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் குரும்பூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் மதுரை தமிழ் தேசிய பேரியக்க ராசு கண்டன உரையாற்றினார்.

    குரும்பூர்:

    குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் மோசடி செய்த நகை, பணத்தை மீட்கக்கோரி பாதிக் கப்பட்ட மக்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில், திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகைக்கடன் தள்ளுபடிக்காக கடந்த 2021 செப்டம்பர் 8-ந்தேதி மற்றும் 13-ந்தேதி நகை கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்ட போது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது.

    இதேபோல் வைப்புநிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ.27 கோடி வரை மோசடி செய்ததாக விசா ரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்த மோசடி வழக்கில் வங்கி தலைவர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் செய லாளர் தேவராஜ் உடல்நிலை சரியில்லை என்று கூறி முன்ஜாமீன் பெற்றார். தலை மறைவாக இருந்த துணை செய லாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞான பாயும் கைது செய்யப் பட்டார்.

    இந்நிலையில் பாதிக்கப் பட்டவர்கள் அமைச்சர், அதிகாரிகளிடம் நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட வர்கள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனைத் தொடர்ந்து நேற்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உழவர்கள் அமைப்பு சார்பில் குரும்பூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக உழவர் முன்னணி மாநில துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மதுரை தமிழ் தேசிய பேரியக்க ராசு கண்டன உரையாற்றினார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பி னர். குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×