search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்
    X

    டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்

    • கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.
    • மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு நோய்த்தொற்று ஏற்படுத்தக்கூடிய டெங்கு கொசு பரவுதலை தடுத்தல், மழைநீர் தேங்காமல் வடிய வைத்தல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு தீவிரப் படுத்தியுள்ளது.

    அந்த வகையில் திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.

    பெருந்தரக்குடி ஊராட்சியில் பெருந்தரக்குடி, குளிக்கரை, மேம்பாலம், சார்வன் ஆகிய இடங்களில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணி நடைபெற்றது.

    இப்பணியினை ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்காணித்து ஆலோசனை வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    இதுபோல் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×