என் மலர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
- தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
- தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திடனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள்உற்பத்தியை தடுத்து காய்ச்சல்ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து அழித்து வருகின்றனர்.
பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி யாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும் பள்ளிவளாகங்களை சுற்றி பழையடயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டு பிளிசிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.
மேலும் பள்ளி ஒன்றில் தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திட பாட்டிலில் களபணியாளர்கள் எடுத்து சென்றனர்.