search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்
    X

    டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்

    • முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
    • வீட்டில் உள்ள தொட்டிகளில் சிறிய தொட்டிகளில் பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி 36-வது வார்டில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தெரு பகுதியில் டெங்கு தடுப்பு பணி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர் முத்துக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    முகாமில் மாநகராட்சி கவுன்சிலர் கண்ணுக்கினியாள், துப்புரவு ஆய்வாளர் ஜோசப் சேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாஸ்டிக் கப், தேங்காய் சிரட்டை, டயர், உடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் அகற்றப்பட்டது.

    மேலும் வீட்டில் உள்ள தொட்டிகளில் சிறிய தொட்டிகளில் பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், கொசுப்புழு உற்பத்தி ஆகாத வண்ணம் தொட்டியை மூடி வைக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×