search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணு தொடர்பு துறை தேசிய கருத்தரங்கு
    X

    கருத்தரங்கம் நடந்தபோது எடுத்த படம்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணு தொடர்பு துறை தேசிய கருத்தரங்கு

    • கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு தொடர்பு துறை முதுநிலை இணை பேராசிரியர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • கருத்தரங்கில் 15 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணு தொடர்பு துறை மற்றும் உள்தர உறுதிப்பிரிவு சார்பில், ''மின்னணு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் சமீபத்திய போக்குகள்'' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். பேராசிரியர் வளனரசு வரவேற்று பேசினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து மின்னணு தொடர்பு துறை தலைவர் பெனோ எடுத்துரைத்தார்.

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு தொடர்பு துறை முதுநிலை இணை பேராசிரியர் மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் தற்போதைய தொழில்நுட்பங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்'' என்று கூறினார். தொடர்ந்து அவர், மாநாட்டின் தொகுப்பு நூலை வௌியிட, அதனை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி பெற்று கொண்டார்.

    கருத்தரங்கில் 15 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் மணி, பேராசிரியர் வளனரசு ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு ஆராய்ச்சி கட்டுரைகளை ஆராய்ந்து வழிகாட்டினர். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    Next Story
    ×