search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாச்சிகுளம்  மேல்நிலை நீர்தேக்க  தொட்டியில் இறங்கி ஆய்வு செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர்
    X

    மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி ஆய்வு செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர் தாஜூதீன்.

    நாச்சிகுளம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இறங்கி ஆய்வு செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர்

    • குடிநீர் தொட்டியின் உள் சுவரில் பாசிகள் படர்ந்து அழுக்குகள் நிறைந்திருப்பதையும் நீண்ட நாட்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.
    • சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் உதயமார்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிகுளம் 5-வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுதீன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த தொட்டியில் ஏறி தாஜுதீன் அதன் உள்ளே இறங்கி குடிநீர் தொட்டியின் சுத்தம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் தொட்டியின் உள் சுவரில் பாசிகள் படர்ந்து அழுக்குகள் நிறைந்திருப்பதையும் நீண்ட நாட்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.

    இதுகுறித்து நாச்சிகுளம் பகுதி உறுப்பினர்கள் அஜிரன், ராயல்காதர் ஆகியோருடன் ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து தங்கள் வார்டுகளில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் பராமரிக்கப்படாமல் உள்ளது.

    குடிநீர் வினியோக பணியாளர் முறையாக பராமறிப்பு பணிகளை செய்வது கிடையாது. நாச்சிகுளம் பகுதி நீர் தேக்க தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் .

    இதுபோல் ஒவ்வொரு மாதமும் நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீர் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

    Next Story
    ×