என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இடிந்தகரை, கூத்தன்குழி பகுதிகளில் ரூ.65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்
- ராதாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- பல்வேறு நிதிகளின் கீழ் இடிந்தகரையில் சிமெண்ட் சாலை, மீன் வலை கூடம், மீன் விற்பனை நிலையம், அங்கன்வாடி மையம், விஜயாபதி பஞ்சாயத்து குறிஞ்சிகுளத்தில் பேருந்து நிறுத்தத்திற்கும், கூத்தன்குழியில் வண்ண கற்கள் பதிக்கும் பணிக்கும், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
திசையன்விளை:
ராதாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பல்வேறு நிதிகளின் கீழ் இடிந்தகரையில் சிமெண்ட் சாலை, மீன் வலை கூடம், மீன் விற்பனை நிலையம், அங்கன்வாடி மையம், விஜயாபதி பஞ்சாயத்து குறிஞ்சிகுளத்தில் பேருந்து நிறுத்தத்திற்கும், கூத்தன்குழியில் வண்ண கற்கள் பதிக்கும் பணிக்கும், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா, மவுலின், படையப்பா முருகன், இசக்கி பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சகாயராஜ், வளர்மதி, முருகேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சூசை அந்தோணி, மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், சரவணகுமார், சந்தியாகு, ராஜேஷ், வளன், பாப்டிஸ், ரீகன், யேசுதாஸ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், சங்கர், எழில் ஜோசப், குமார், காமில், முத்தையா, டென்னிஸ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்