search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ரூ.4 கோடியே 65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டபணிகள்
    X

    காவேரிப்பட்டணம் தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் பேரூராட்சி செயல் அலுவலர் சாம் கிங்ஸ்டன், உதவி பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் உள்ளனர்.

    காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ரூ.4 கோடியே 65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டபணிகள்

    • காவேரிப்பட்டணம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் என மொத்தம் ரூ.4 கோடியே 64 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சியில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் சமுதாக கூடம் கட்டுமான பணிகள், சுண்டேகுப்பம் ஊராட்சி செட்டிமாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ். ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதே போல், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் கரகூர் வளமீட்பு பூங்காவில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரம் மமிப்பில் கழிவு நீர் கசடு சுத்திகரிப்பு மையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஈரக்கழிவுகளை உரமாக்கும் கூடம் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, காவேரிப்பட்டணம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் என மொத்தம் ரூ.4 கோடியே 64 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மலையாண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

    தொடர்ந்து சுண்டேகுப்பம் ஊராட்சி, செட்டிமாரம்பட்டி, மலையாண்டஅள்ளி, கன்னிநகர் மற்றும சந்தாபுரம் ஆகிய கூட்டுறவு நியாய விலைக ்கடைகளுக்குட்பட்ட பகுதியில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் சபாரத்தினம், சுமதி, தமிழ்செல்வி, பணி மேற்பார்வையாளர்கள் கவிதா, விஜயராஜ், ரீனா, வருவாய் ஆய்வாளர்கள் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் துரைசாமி, எல்லம்மாள், அரசுகோவிந்தசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருப்பதி, பேரூராட்சியில் பேரூராட்சி செயல்அலுவலர் சாம்கிங்ஸ்டன், ஜீனுர் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் அனிஷாராணி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, இளநிலை பொறியாளர் பழனிசாமி, இளநிலை உதவியாளர் இளங்கோ மற்றும் அலுவலக பணியாளர்கள் கார்த்திகேயன், செந்தில், முகமதுஇத்ரிஸ், விக்னேஷ், ராஜேஸ்வரி, விஞ்ஞானிகள், பேராசிரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×