search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ரூ.22¾ லட்சம் காணிக்கை
    X

    ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ரூ.22¾ லட்சம் காணிக்கை

    • உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், உள்பட 200-க்கும் மேற்பட்டோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • ரூ.22 லட்சத்து 73 ஆயிரத்து 717-ம், 51 கிராம் தங்கமும், 261 கிராம் வெள்ளியும், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பணமும் இருந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 17 உண்டியல்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கடந்த 2022ம்ஆண்டு ஆகஸ்டு மாதம் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி முன்னிலையில், ஆய்வாளர் தனலெட்சுமி மற்றும் கோவில் செயல்அலுவலர் கோ.கிருஷ்ணக்குமார் மேற்பார்வையில் முன்தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.

    உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், கோவில் பணியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் காணிக்கையாக ரூ.22 லட்சத்து 73 ஆயிரத்து 717-ம், 51 கிராம் தங்கமும், 261 கிராம் வெள்ளியும், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பணமும் இருந்தது.

    Next Story
    ×