search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக குவிந்த பக்தர்கள். (சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்)

    புத்தாண்டையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • நடை திறப்பதற்கு முன்னே திரளான பக்தர்கள் குவிந்தனர்.
    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தஞ்சை பெரியகோவில்

    இதனை முன்னிட்டு, உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியக்கோவிலில் இன்று காலை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    வழக்கமாக பெரிய கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவர். இன்று ஆங்கில புத்தாண்டு என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் காலை முதலே வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.

    இது தவிர வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர்.அவர்கள் அனைவரும் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்ழ கொண்டனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேப்போல் பெரிய கோவிலில் உளன்ள முருகர் சன்னதி, வராகி அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளிலும் நடந்த புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மாரியம்மன் கோவில்

    இதேப்போல் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்காக கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. நடை திறப்பதற்கு முன்னே பக்தர்கள் திரளானோர் குவிய தொடங்கினர். தஞ்சை மட்டுமில்லாது சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் நடந்தே வந்து மாரியம்மனை மனமுருகி தரிசித்தனர்.

    இந்த ஆண்டில் அனைவரும் நலமுடனும், நோய் நொடியின்றி வாழ வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர்.

    பல பக்தர்கள் முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தினர். தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேப்போல் தஞ்சை கோடியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    Next Story
    ×