என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி  2-வது சனிக்கிழமையை ஒட்டி சேலம் பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
    X

     புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சேலம் குரங்கு சாவடியில் உள்ள சென்றாயப் பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம். புரட்டாசி 2-வது சனிக்கிழமையை ஒட்டி சேலம் அய்யன்திரு மாளிகை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் விஷ்ணு துர்க்கை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    புரட்டாசி 2-வது சனிக்கிழமையை ஒட்டி சேலம் பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    • புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று சேலம் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

    சேலம்:

    காக்கும் கடவுளான திருமாலுக்கு உரிய மாதமாக புரட்டாசியை சொல்வதால் அந்த மாதத்தில் விரதம் இருந்தால் பெருமாளின் அருள் மட்டுமல்ல அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற்று விடலாம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனிபகவானால் ஏற்பட்டும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    அதன்படி புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று சேலம் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவ மூர்த்திகளான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்செய்தனர்.

    அம்மாபேட்டை வேணுகோபால் சுவாமி கோவில், சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரெங்கநாதர் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில்,சேலம் பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவில்,சேலம் டவுன் பாபு நகர் பகுதியில் அலமேலுமங்கை தாயார் சமேத திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×