search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் பெருமாள் கோவிலில் கொள்ளை: மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
    X

    தாரமங்கலம் பெருமாள் கோவிலில் கொள்ளை: மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

    • பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் பழங்கால ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது.
    • ஸ்ரீதேவி, பூதேவி, மூலவரான பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திகள் என மொத்தம் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடி க்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் காவலாளியை கொலை செய்து கோயில் உட்பிரகாரத்தில் இருந்த நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. அந்தச் சம்பவம் ஆனது அச்சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தற்போது தாரமங்கலம் சாவடி தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் பழங்கால ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி, மூலவரான பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திகள் என மொத்தம் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடி க்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து நேற்று வழக்கம்போல காலையில் கோயிலில் பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்டு குழம்பிப் போன பூசாரி கோயில் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோயில் உள்ளே இருந்த 8 ஐம்பொன் சாமி சிலைகள் மாயமானது தெரியவந்தது.

    அதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து அதன் பின்னர் தாரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா, காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் தலைமையில் காவல்துறை யினர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டு மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் தாரமங்கலம் பகுதியில் பழங்கால 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதற்கட்ட விசாரணையாக அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கொள்ளை யர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொள்ளையர் குறித்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

    Next Story
    ×