search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாதத்தையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இறைச்சி, மீன் கடைகளில் வியாபாரம் மந்தம்
    X

    புரட்டாசி மாதத்தையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இறைச்சி, மீன் கடைகளில் வியாபாரம் மந்தம்

    • இறைச்சி, மீன் கடைகளில் வியாபாரம் மந்தம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள்


    புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதம் இந்து மக்கள் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். இந்த மாதம் முழுவதும் சிலர் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.

    இந்த நிலையில் 2- வது புரட்டாசி ஞாயிற்றுக்கி–ழமையான இன்று கிருஷ்ணகிரி, ஒசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி, காவேரிப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகளில் மிக குறைவாக மக்கள் இறைச்சி வாங்க வந்திருந்தனர். அதே போன்று மீன் கடைகளுக்கு மீன் வாங்க வருவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இதனால் இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

    இதே போன்று தருமபுரி நகரில் உள்ள இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்–கிழமைகளில் அதிகளவில் வந்து வாங்கி செல்வார்கள்.

    ஆனால் இன்று மிக குறைவானே நபர்களே வந்து இறைச்சியை வாங்கிச் சென்றனர். மீன் மார்கெட்டிலும் மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருந்தது. இதே போன்று அரூர், மொரப்பூர், பென்னாகரம், பாப்பி ரெட்டிப்பட்டி, ஏரியூர் போன்ற பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் விற்பனை மந்தமாகவே இருந்தது.

    இது குறித்து இறைச்சி கடை வியாபாரி ஒருவர் கூறியதாவது;-

    பொதுவாக வார விடுமுறையான ஞாயிற்றுக்–கிழமைகளில் அசைவ பிரியிர்கள் அதிகாலை முதல கடை முன்பு அதிக அளவில் வந்து காத்திருந்து இறைச்சியை வாங்கி செல்வார்கள். இன்று புரட்டாசி மாத ஞாயிற்று கிழமை என்பதால் மிக குறைவானவர்களே வந்து இறைச்சியை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் பாதிப்பு அடைந்துள்ளது என்றார்.

    Next Story
    ×