search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
    X

    பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

    • காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் மிதக்கும் கருவிகளை கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள பேரிடர் மேலாண்மை குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் நடந்தது.

    பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள கோவில் குளத்தில் தத்ரூபமாக நடைபெற்ற மீட்பு ஒத்திகையை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    ஐந்து 108 வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு சைரன் சத்தம் ஒலிக்க பரபரப்பாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் நீரில் மூழ்கியவர்களை ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணஙகள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய வர்களை காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    ரத்த காயங்களுடன் அடிபட்டவர்களை தூக்குதல், மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி அளிப்பது, வெள்ளத்தில் சிக்கிய–வர்களை கண்டுபிடித்து காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு கைகளில் வண்ண ரிப்பன்களை கட்டுதல் போன்ற மீட்பு நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

    ஸ்கூபா போன்ற அதி நவீன மிதக்கும் கருவிகளை கொண்டு நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தண்ணீரில் தத்தளித்த கால்நடையை காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மையின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால பெட்டக உபகரணங்களை ஆய்வு செய்த வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வளர்களை பாராட்டினார்.

    ஏராளமான வாகனங்கள் சைரன் ஒளி எழுப்பி நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×