search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடியில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி
    X

    பேரிடர் கால ஒத்திகை நடைபெற்ற காட்சி. 

    திட்டக்குடியில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி

    • பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் பயிற்சி நடைபெற்றது.
    • வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் துறை சார்பில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் மாவட்ட அலுவலர் குமார் உத்தரவின் பேரில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    ஒத்திகையின் போது திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் கூறுகையில் பெண்கள் சமையல் செய்யும்போது பருத்தி ஆடை அணிவது நல்லது, குழந்தைகளை அடுப்பின் அருகில் தீப்பெட்டியுடன் விளையாட அனுமதிக்காதீர்கள், வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள். ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் எங்கேயும் போகாமல் கீழே படுத்து உருளுங்கள். பின் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒத்திகை யில் திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட கலந்து கொண்டனர்..

    Next Story
    ×