search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்
    X

    விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

    • கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • 11 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளின் தொகுப்பு வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.

    அட்மா திட்டத்தின் கீழ் தனிக்கோ ட்டை பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளின் கால்நடை களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி மூலம் நடத்தப்பட்டது.

    இதில் 60 குடும்பங்களை சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து சத்து மாத்திரை மற்றும் உன்னி நீக்க மருந்துகள் 100 சதவீத மானியத்தில் இலவசமாக வழங்கப்பட்டது.

    வேளாண்மை அலுவலர் இளங்கோ , துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி, வேளாண்மை உதவி அலுவலர் ராமு ஆகியோர் விவசாயிகளின் திட்ட வாரியான தேவைகளை பதிவு செய்து தென்னங்கன்றுகளை வழங்கினர்.

    அட்மாதிட்ட அலுவலர்கள் சுகிர்தா, ராஜு, அய்யா மணி ஆகியோர் குடல் புழு நீக்க கால்நடை மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

    மேலும் 11 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளின் தொகுப்பு உதவி விதை அலுவலர் இளங்கோ மற்றும் கலையரசன் மூலம் பதிவு செய்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.

    பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் இளமாறன் முன்னுரிமைக்கு பதிவு செய்யாத விவசாயிகளை உழவர் செயலியில் பதிவு செய்து உதவினார்.

    அட்மா திட்ட அலுவலர்கள் விவசாயிக ளுக்கு உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறினர்.

    வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி நடப்பு நிதியாண்டில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அதன் மானிய விகிதம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

    இதில் முன்னோடி விவசாயிகள் அண்ணா துரை, ஜெயமணி , சக்திவேல், அன்பழகன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×