search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்
    X

    பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

    பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
    • பயனாளிகளுக்கு 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கல்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, வடக்கு பட்டம் கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாமில் திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் ஆசீர் கனகராஜன் கலந்துகொண்டு திட்டத்தின் சிறப்புகள் குறித்து கூறினார்.

    இதில், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.

    தொடர்ந்து, பயனாளிகளுக்கு முழு மானியத்தில் தென்னங்கன்றுகள், 50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள், துத்தநாக சல்பேட், 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

    இதில் வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை அலுவலர் மகேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் வேளாண் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×