என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கல்
By
மாலை மலர்24 Jan 2023 2:17 PM IST

- ரூ.10 லட்சம் செலவில் கல்வெட்டு பாலம் கட்டப்பட்டது.
- ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்பதேவன்காடு பகுதிலிருந்து அருகிலுள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் இணைப்பு சாலையில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தையும், அதே பகுதியில் ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடத்தையும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், நகராட்சி கவுன்சிலர் நமசிவாயம், முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு, ராஜகிளி, மாரியப்பன் உள்பட பிரமுகர்கள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X