என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில், மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம்
- மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
- கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் பிப்ரவரி 21-ந் தேதி அன்று நடத்தப்பட உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்வது குறித்து, மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் லலிதா தலைமை தாங்கி பேசியதாவது ;-
இந்த கூட்டத்தில் போட்டிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளுக்கு மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் 2.2.2023 முதல் 4.2.2023 வரை தேதிகளிலும்,
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு (17 முதல் 25 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள், 13.02.2023 மற்றும் 14.02.2023 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.
பொதுப்பிரிவினர் ஆடவர் மற்றும் மகளிருக்கு (15 முதல் 35 வயது வரை) கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய போட்டிகள் 23.02.2023 அன்றும், மாற்றுத் திறனாளிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீ ஓட்டம் மற்றும் இறகுபந்து போட்டிகளும், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் அடாப்டட் வாலிபால் போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீ ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவிதிறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், கபடி ஆகிய போட்டிகள் 17.02.2023 அன்றும் நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து மற்றும் செஸ் ஆகிய போட்டிகள் 21.02.2023 அன்றும் நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ள www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர்குமரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்