என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
- போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர் என 331 பேர் பங்கேற்றனர்.
- இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 60 கோப்பைகள், 30 தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன் வழங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. ஆதித்தனார் கல்லூரி செஸ் கிளப், செந்தூர் தாலுகா செஸ் கழகம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர் என 331 பேர் பங்கேற்றனர். 10 மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோர், பொதுப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் வரவேற்று பேசினார். செந்தூர் தாலுகா செஸ் கழக தலைவர் டாக்டர் வெற்றிவேல் வாழ்த்தி பேசினார். மாவட்ட செஸ் கழக செயலாளர் கற்பகவல்லி முதன்மை நடுவராக செயல்பட்டார்.
பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 60 கோப்பைகள், 30 தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன் வழங்கினார். பொதுப்பிரிவினருக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனையின்பேரில், செஸ் கிளப் இயக்குனர் மோதிலால் தினேஷ் மற்றும் செஸ் கிளப் மாணவ உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.