என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாவட்டத்தில் ஒரே நாளில் 219 மி.மீ. பதிவானது
- கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தது.
- பேராவூரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
தஞ்சாவூர்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தது. நேற்று பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இரவில் திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தது.
சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தஞ்சை ,வல்லம், பட்டுக்கோட்டை , மதுக்கூர், பூதலூர், பேராவூரணி உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 219.90 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது .
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழை அளவு மி.மீ.யில் வருமாறு :-
மதுக்கூர்-34.20, பூதலூர் -32.80, வெட்டிக்காடு -27.20, பட்டுக்கோட்டை -26.50, குருங்குளம் -17.60, வல்லம் -15.






