என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் மாலைராஜா வழங்கிய காட்சி. அருகில் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
தச்சநல்லூர் பகுதி தி.மு.க. சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

- தச்சநல்லூர் பகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கு சீருடையும், 500 பெண்களுக்கு சேலையும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நெல்லை:
தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்த தையொட்டி நெல்லை மாநகர் தச்சநல்லூர் பகுதி கழகம் சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வர்த்தகர் அணி மாநில இணைச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான மாலைராஜா தலை மை தாங்கினார். முன்னாள் மண்டல சேர்மனும், கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கோகிலவாணி சுரேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பா ளர்களாக பேச்சாளர்கள் நெல்லை ரவி, முத்தையா, ராவணன், உடன்குடி தன பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இளைஞர் அணி வக்கீல் அலிப் மீரான், நிர்வாகிகள் அப்துல் கையூம், பூக்கடை அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் கோபி, அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அருள்மணி, மாவட்ட பிரதிநிதி இசக்கிபாண்டி, இளைஞரணி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கு சீருடையும், 500 பெண்களுக்கு சேலையும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் செய்திருந்தார்.