search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 70 சதவீதம் நிறைவேற்றம் : பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை உறுதியாக வழங்கப்படும் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 70 சதவீதம் நிறைவேற்றம் : பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை உறுதியாக வழங்கப்படும் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
    • தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தமிழ்கலாச்சாரம் தமிழ் மொழி காக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

    புதுமைபெண் திட்டம்

    மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை தொடர்வதற்கு ரூ. 1000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தமிழ்கலாச்சாரம் தமிழ் மொழி காக்கப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. தற்போது ஒன்று முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. தெற்கு வளர்ச்சியில்லை என்ற நிலை மாறி தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது.

    மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி தமிழர்களின் நலனை பாதுகாத்து கொள்வோம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். டோல்கேட் கட்டணம் உயர்வு சிலிண்டர் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் மோடி அரசு தான். எதுவுமே செய்யாமல் விலைவாசி உயர்வுக்கு வழிவகை செய்ய எற்படுத்தியுள்ளது.

    ரூ.1000 உதவித்தொகை

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக 530 கொடுக்கப்பட்டு 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கான 1000 உதவித்தொகை உறுதியாக வழங்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, திண்டுக்கல் லியோனி , மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ் புதியவன், ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, மதியழகன், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, ஆனந்தகபரியேல்ராஜ், முருகஇசக்கி, டேனியல், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், பவானிமார்ஷல், ஜான்சிராணி, வைதேகி, சுயும்பு, கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, ஜான் அலெக்ஸாண்டர், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதா செல்வ மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×